jkr

Thursday, December 10, 2009

ப்ளாக் உருவாக்குவது எப்படி?

முதலில் http://www.gmail.com/ போய் உங்களுக்கென ஒரு gmail account உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலும், blogging க்கு என புது அக்கவுண்ட் ஒன்று உருவாக்கிக் கொள்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்.


இப்போ,
http://www.blogger.com/ ஓபன் செய்யுங்க. அதில் கீழ்கண்டவாறு இருக்கும்.

இதில் உங்கள் gmail user id, password கொண்டு லாக் இன் செய்யுங்கள். இப்போ கீழே உள்ள ஸ்கிரீன் வரும்.
இதில் display name என்று இருக்கும் இடத்தில் உங்க பெயரை அல்லது புனைப் பெயரை தரவும். ஒவ்வொரு பக்கத்துக்கு கீழும் இப்பெயர் தான் வரும். (for example, posted by: sumazla). அதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்து விட்டு, continue என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இப்பொழுது, கீழ்கண்டவாறு தோன்றும்.
முதலில் blog title. இதில் உங்க ப்ளாகின் தலைப்பை கொடுக்கவும். ரொம்ப யோசனை செய்து கொண்டு இருக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தலைப்பில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உதாரணமாக பூக்களைப் பற்றிய உங்கள் ப்ளாகிற்கு Flowers என்று title கொடுங்கள்.

அடுத்து ப்ளாக் அட்ரெஸ். இது தான் உங்கள் வலைப்பூவின் பெயர். இது ஈமெயில் ஐடி போல, ஒரு முறை கொடுத்து விட்டால் மாற்ற முடியாது. நன்கு யோசித்து நல்ல தலைப்பாக தேர்ந்தெடுங்கள். நான் தேர்ந்தெடுத்த தலைப்பு sumazla. அது எந்த தலைப்பாக இருந்தாலும் அதனுடன் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் என்பது சேரும். உதாரணமாக http://sumazla.blogspot.com/. இந்த பெயரை explorer ல் யார் அடித்தாலும் உங்க ப்ளாக் ஓபன் ஆகும்.

ஈமெயில் ஐடி போல பல பெயர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் ஆதலால் அவைலபிலிடி availability செக் பண்ணிக்கோங்க. முடிந்ததா, இப்ப continue பட்டனை க்ளிக் பண்ணுங்க. மீதி அடுத்த அத்தியாயத்தில்.

Tuesday, December 8, 2009

ப்ளாக் என்றால் என்ன?

முதலில் ப்ளாக் (blog) என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதோ நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தான் ப்ளாக். வேண்டுமானால் இலவச வெப்சைட் என்று வைத்துக் கொள்ளலாம். ப்ளாகிற்கு தமிழில் வலைப்பூ என்பார்கள்.

யார் வேண்டுமானால், ப்ளாக் தொடங்கலாம். அதில் உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் படங்களையும் போட்டு வைத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் இருந்து மற்றவர்கள் அதைப் பார்க்க முடியும்.

ப்ளாக் தொடங்குவது மிக எளிது. பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ஜிமெயில் (gmail.com ) உங்களுக்கு இலவசமாக அதைத் தருகிறது. பெரிய அளவில் computer knowledge ம் தேவை இல்லை. பேஸிக் கம்ப்யூட்டர் அறிவுடன், கொஞ்சம் கற்பனைத் திறனும் இருந்தால் போதும்.

முதலில் ப்ளாக் தொடங்கும் முன், எதற்காக ப்ளாக் தொடங்குகிறீர்கள்; அதில் என்ன போடுகிறீர்கள் என்று ஒரு லே அவுட் போட்டுக் கொள்ளனும். தமிழிலா, ஆங்கிலத்திலா என்று முடிவு செய்து கொண்டு, தமிழில் என்றால் அதற்கான typing software install செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக உங்கள் ப்ளாகில் பூக்களைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஒரு அவுட் லைன் போட்டுக் கொள்ளுங்கள். ப்ளாக் உருவாக்க நீங்கள் ரெடி. எப்படி உருவாக்குவது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

-சுமஜ்லா

Monday, December 7, 2009

தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்

அனைத்து பதிவர்களுக்கும் வாசக நெஞ்சங்களுக்கும் எனது வணக்கங்கள்
" தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் " என்ற இணையதளம் தமிழ் வலைப்திவர்களுக்காக 08 -12 -2009 அன்று தொடங்கப்பட்டது இந்த வலைதளத்தில் தமிழ் வலைபதிவு உதவி சம்பதமான தகவல்கள் மட்டுமே இங்கு பதியப்படும் என்பதையும் அறியத்தருகிறோம் இந்த வலைதளத்தில் பிளாக்கர் அல்லது வோர்ட்பிரஸ் அல்லது வேறு வலைதளங்கள் பற்றியே இங்கு பதிவு எழுதப்படும். தற்பொழுது இந்த வலைத்தளத்திற்கு பதிவர்களை சேர்க்கும் பணி நடைபெறுகிறது இந்த வலைத்தளத்தில் நீங்களும் ஒரு பதிவாளராக சேர விரும்பினால் எனது இமெயில் முகவரிக்கும் உங்கள் பெயரையும் இமெயில் முகவரியையும் அனுப்பிவிடுங்கள் முக்கியமாக ஜிமெயில் வைத்திருப்பவர்களுக்கே இந்த வலைத்தளத்தில் சேர கூகிள் அனுமதியளிக்கும் ஜிமெயில் கணக்கு இல்லாதவர்கள் உங்கள் பதிவுகளை nvallipuram.bloggerhelp.@blogger.com என்ற இமெயில் முகவரியுடகா அனுப்பலாம் முக்கியமாக பதிவுகள் அனைத்தும் தமிழில் எழுதப்படவேண்டும்.இந்த வலைத்தளம் பற்றிய கருத்துக்களை நீங்கள் முன்வைக்கவும்.இந்த வலைதளத்தில் எழுதப்படும் பதிவுகளுக்கு அந்த பதிவாளரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் தயவு செய்து நாகரீகம் அற்ற வார்த்தைகளை தவிர்த்து கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் கருத்துகள் இடுபவர்கள் அவர்களுடைய கருத்துகளுக்கு அவர்களே பொறுப்பு
எனது இமெயில் முகவரி : nvallipuram@gmail.com
~~ நன்றி ~~

Saturday, December 5, 2009

What is Google Chrome OS?

Google Chrome OS is an open source operating system for people who spend most of their time on the web. It aims to provide users with a fast, simple and secure computing experience. Netbooks running Google Chrome OS will be available to consumers late next year. Sign up below if you'd like to receive news on Google Chrome OS from time to time.https://services.google.com/fb/forms/googlechromeossignup/

Wednesday, December 2, 2009

முற்றிலும் மாறுபட்ட Mp3 மற்றும் வீடியோ Cutter

இந்த Cutter Software மற்ற மென்பொருளை விட அதிக பயன்களை
நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.

MPEG 1/2, MPEG4, Divx, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash Video முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

PQI நிறுவனத்தின் மிக சிறிய பென் டிரைவ்

PQI நிறுவனம் i810 என்னும் Model-லில் மிக சிறிய பென் டிரைவினை தயாரித்து உள்ளது. இது தான் தற்போது உள்ள உலகின் மிக சிறிய PenDrive ஆகும்.







--------------------------------------------நன்றி----------------------------------------------