jkr

Tuesday, November 17, 2009

சில பிரபலமான மீடியா பிளேயர்கள்

மீடியா பிளேயர்கள் என நாம் அழைப்பது கம்ப்யூட்டர்களில் ஆடியோ மற்றும் வீடியோக்களை இயக்கும் புரோகிராம்களாகும். இன்டர்நெட்டில் இத்தகைய பிளேயர்கள் இலவசமாக இயக்கிப் பயன்படுத்தவென அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கின்றன. அத்துடன் மைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் மீடியா பிளேயர் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இத்தனை இருக்கையில் எதனைப் பயன்படுத்துவது என்பது நம் முன் உள்ள கேள்விக் குறிதான். சிலர் அனைத்தையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்த்துப் பின் தமக்கென ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

இந்த மீடியா பிளேயர்கள் எப்படி கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆடியோ மற்றும் வீடியோவினை இயக்குகின்றன, டிவிடிக்களை எப்படி இயக்குகின்றன, எப்படி அவற்றை காப்பி செய்கின்றன, பிளே லிஸ்ட் மற்றும் மீடியா லைப் ரேரிகளை எப்படி உருவாக்கிப் பயன்படுத்தத் தருகின்றன என்பதன் அடிப்படையில் இந்தக் குறிப்புகள் தரப்படுகின்றன.

1. விண் ஆம்ப் (winamp)

வெகு காலமாக கம்ப்யூட்டரில் பெரும்பான்மையானவர்களால் பயன்படுத்தப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். இதன் இலவச பிளேயரை அண்மையில் டவுண்லோட் செய்து அதனைத் தொடக்க காலத்தில் வந்த விண் ஆம்ப் பிளேயருடன் ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி மலைப்பைத் தருகிறது. அதிகமான வசதிகளுடன் கூடிய இதன் தொகுப்பு இலவசமாகக் கிடைக்கிறது. சற்று குறைந்த அளவில் பணம் கட்டினால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வசதிகளுடன் ஒரு பதிப்பு கிடைக்கிறது.

இலவசமாகக் கிடைக்கும் தொகுப்பு அனைத்து வசதிகளுடன் கிடைப்பதால் விரும்புபவர்கள் அதனையே பெற்று பயன்படுத்தலாம். இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் எக்கச் சக்க ஆப்ஷன்ஸ் கிடைக்கிறது. இதன் ஷவுட்காஸ்ட் டிவி மற்றும் ரேடியோ (Shoutcast TV and Radio) பலவகையான வீடியோ காட்சிகள், முழு திரைப்படங்களைத் தருகின்றன.

நூற்றுக்கணக்கான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களை இதன் மூலம் கேட்கலாம். எம்பி3 பிளேயரை கம்ப்யூட்டருடன் இணைக்கையில் அதனை எளிதாகத் தன்னுடன் இணைத்து இயங்குகிறது. இதனால் ஆடியோ ட்ரேக்குகளை இணைக்க முடிகிறது. இதன் மூலம் ஒருமீடியா லைப்ரேரியை மிக எளிதாக அமைக்க முடிகிறது. இதன் மூலம் சிடி ஒன்றை பதியலாம். ஆடியோ சிடி ஒன்றை அதன் டிரைவில் போட்டு அதனை இதன் மூலம் இயக்கலாம். இதற்கான பல ஆட் ஆன் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பதியும்போது இதனை இயக்கும் அனுபவம் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. விண் ஆம்ப் தொகுப்பை வேண்டாம் என்று ஒதுக்குவது மிகக் கஷ்டம்.

ஏனென்றால் அது தரும் எளிமையான, ஆனால் இனிமையான வசதிகள் அவ்வளவு உள்ளன. ஆனால் ஒரே ஒரு குறை உள்ளது. இது கம்ப்யூட்டரில் பதிந்த வீடியோ பைல்களை இயக்கினாலும் டிவிடியை இயக்க மறுக்கிறது. அத்துடன் டிவ் எக்ஸ் பைல்களையும் இயக்கவில்லை. ஆனால் இது ஒரு பெரிய குறை இல்லை. விண்டோஸ் மீடியா பிளேயர் தொகுப்பு 11க்கு மாற்றாக ஒரு மீடியா பிளேயரைத் தேடுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. ரியல் நெட்வொர்க்ஸ் ரியல் பிளேயர் (Real Networks Realplayer)

இதனை விரும்புபவர்கள் அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள்; வேண்டாம் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுப்பவர்கள் மீண்டும் இதன் பக்கம் திரும்ப மாட்டார்கள். இலவசமாக அடிப்படை புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதனை இறக்கிக் கொண்டு மேலும் கூடுதலாக வசதிகள் வேண்டுமாயின் ரூ.1,600 வரை செலுத்தி பெறலாம். இலவச பதிப்பிலேயே அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளது. மியூசிக் வீடியோ மற்றும் ரேடியோ ஸ்டேஷன்களையும் பெற இதில் வழி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மீடியாக்களையும் மிக நன்றாக இயக்குகிறது.

மியூசிக் ட்ரேக்குகள் கொண்ட லைப்ரேரியை அமைப்பதுவும் எளிதாக உள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒரு எம்பி3 பிளேயரை இணைத்துவிட்டால் அதனுடன் இணைந்து இயங்குகிறது. ட்ரேக்குகளை சிடியிலிருந்து பிரித்து பதியும் வசதி தரப்படுகிறது. கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள டிவிடி, ஏ.வி.ஐ., டிவ் எக்ஸ் மற்றும் டபிள்யூ எம் வி மூவிகளை இயக்குகிறது. ஆனால் ஒரு சில பார்மட்டுகளை இயக்கக் கட்டளை கொடுத்த பின்னரே இதற்கு ரியல் பிளஸ் கட்டணம் கொடுத்து அப்கிரேட் செய்திட வேண்டும் என செய்தி வருகிறது. அதுமட்டுமின்றி அடிக்கடி இந்த செய்தி வருவது எவ்வளவு பொறுமைசாலியையும் எரிச்சல் அடைய வைத்திடும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

3. வீடியோ லேன் வி.எல்.சி. (VideoLan VLC )

இது ஒரு லைட் வெய்ட் மீடியா பிளேயர். இன்ஸ்டால் செய்வது மிக மிக எளிது; இயக்குவது அதைக் காட்டிலும் எளிது. ஆடியோ பைல்களை இயக்குகையில் சிறிய விண்டோவில் பாடல் வரியைக் காட்டுகிறது; அவ்வளவுதான். வேறு தகவல்கள் இருக்காது.

ஈக்குவலைசர் மூலம் ஒலியை மாற்றுவது சற்று சிரமமாக உள்ளது. ஆனால் ஈக்குவலைசர் இல்லாமல் இயக்குவதே சிறந்தது என அனுபவம் கூறுகிறது. பிளே லிஸ்ட் அமைப்பது எளிதாக உள்ளது. ஆனால் எல்லாமே ட்ராப் டவுண் மெனு மூலம் உள்ளதால் சற்று ஏமாற்றமாக உள்ளது. இன்டர்நெட் ரேடியோ இதில் இல்லை. ஆனால் டிவிடி இயக்குவற்கும் வீடியோ இயக்குவதற்கும் இந்த பிளேயர் மிகச் சிறந்தது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

4. ஆப்பிள் ட்யூன்ஸ் 9

மிகப் பெரிய அளவில் டிஜிட்டல் மியூசிக் பைல்களை வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் முதலில் நாடுவது ஐ ட்யூன்ஸ் ஆகும். இதனை www.apple.com/itunes என்ற இணைய தளத்தில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த தேர்வு பெர்சனல் கம்ப்யூட்டரில் சிக்கலை உருவாக்கும். மேக் கம்ப்யூட்டரில் இணைந்து செயல்படும். இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும்போதே பல ஆப்ஷன்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது. அதே போல இன்ஸ்டால் செய்த பின்னரும் பைல்களை இதனுடன் இணைப்பது மிக எளிது. இந்த புரோகிராம் பதியப்படும்போதே பல ரேடியோ ஸ்டேஷன்கள் இணைந்தே பதியப்படுகிறது.

சிடிக்களில் உள்ளவற்றை இறக்கலாம்; ஆனால் பைல் பார்மட் மாற்றங்களுக்கு மிக சிரமப்பட வேண்டியுள்ளது. இறக்கிப் பதிந்த ஆடியோ பைல்களை எம்பி3க்கு மாற்ற மீண்டும் அதே நேரத்தை எடுத்து வேலையைச் சிக்கலாக்குகிறது. ஐபாட் சாதனம் வைத்திருப்பவர்களுக்கு ஐ–ட்யூன்ஸ் தான் இறக்கிப் பயன்படுத்தியே ஆக வேண்டிய புரோகிராமாக உள்ளது. ஏனென்றால் ஐ–பாட் சாதனத்திற்கு பைல்களை மாற்றுவது மிக எளிதாக அமைகிறது. மற்ற வகையில் ஐ–ட்யூன்ஸ் அவ்வளவு எளிதானதாக இயக்குவதற்கு மற்றவற்றுடன் இணைந்து செல்வதாக இல்லை.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5. மீடியா பிளேயர் கிளாசிக் 6.4.9.1

இது ஓர் ஓப்பன் சோர்ஸ் மீடியா பிளேயர். இது பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்குகையில் அவ்வளவாக மெமரியைக் கேட்காது. இது ஏறத்தாழ விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4 போலவே கட்டமைப்பும் இயக்க வேலைப்பாடும் கொண்டது. இதனை டவுண்லோட் செய்வது எளிது; ஆனால் இன்ஸ்டால் செய்வதில் சற்று பொறுமை வேண்டும். இது ஸிப் செய்யப்பட்ட பைலாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது. ஒரு போல்டராக கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்கிறது. பின் அதனை என்ன செய்திட வேண்டும் என்ற செய்திகள் எதுவும் இல்லை.

இருமுறை கிளிக் செய்திட வேண்டும். அதன்பின் இன்ஸ்டால் செய்திடும் முன் எக்ஸ்ட்ராக்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை முடித்துவிட்டால் மிகவும் எளிதாக இயக்கலாம். ஏனென்றால் இதன் இயக்கத்தில் அவ்வளவாக ஆப்ஷன்ஸ் இல்லை. இதில் ஆன்லைன் ரேடியோ பிளேயர் எதுவும் இல்லை. ஆடியோ பைல் இயக்கப்படுகையில் அதன் தலைப்பு, ஆர்டிஸ்ட் மற்றும் அதன் நீளம் ஆகியவை காட்டப்படுகின்றன. ஆனால் லைப்ரேரியோ கிராபிக் ஈக்குவலைசரோ இல்லை. ஒரு தரமான ஆடியோ சிடியை இயக்கும்போது அதன் தகவல்கள் காட்டப்படுவதில்லை. பாடி முடிக்கும்போது மட்டுமே அதன் நீளம் தெரிகிறது. டிவிடி யை இதில் இயக்கலாம் என்ற குறிப்பு கிடைக்கிறது. ஆனால் இயக்கத் தொடங்கியவுடன் பைல் மாற்றப்படுகிறது; ஆனால் இயங்க மறுக்கிறது. ஆனால் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட வீடியோ பைல்கள் நன்றாக இயங்குகின்றன.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

6.மைக்ரோசாப்ட் விண்டோஸ் மீடியா பிளேயர் 11

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் 11 ஒரு நல்ல சாய்ஸ். அநேகமாக அனைத்து புதிய விண்டோஸ் கம்ப்யூட்டர்களிலும் இது பதிந்தே தரப்படுகிறது. இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ஆடியோ, ரேடியோ, வீடியோ மற்றும் டிவிடிக்களை எளிதாக இயக்கலாம். பதிந்தவற்றை நல்ல வகையில் லைப்ரேரியாக அமைக்கலாம். ரேடியோ மற்றும் வீடியோவுடன் இணைக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் மிகச் சிறப்பாக இயங்குகிறது.

டிவிடி இயக்க அப்டேட்டட் பைல்களை இறக்கியிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கம்ப்யூட்டர்களில் டிவிடி டிரைவ்கள் இருப்பதால் இது ஒரு குறையாகத் தெரியவில்லை. ஆன்லைனில் திரைப்படம் பார்ப்பதையும் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ பைல்களை இயக்குவதையும் எளிதாக்க அவற்றிற்குத் தேவையான கோடெக் பைல்கள் பதியப்பட்டுள்ளன.

டிவ் எக்ஸ் பைல்களை இயக்க முடியாது என மெசேஜ் கிடைத்தாலும் அவை இயக்கப்படுகின்றன. இதன் மூலம் ஓர் ஆல்பத்தை பிரித்து பதிய முடியும். பைல் வகை மற்றும் அளவுகளை மாற்ற முடியும். பலர் இந்த மீடியா பிளேயர் குறித்து குறை சொன்னாலும் அனைத்து வகைகளிலும் இது சிறந்த பிளேயராகவே உள்ளது. தற்போது விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் 12 விண்டோஸ் 7 உடன் இலவசமாகவே பதிந்து கொடுக்கப்படுகிறது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

பெர்சனல் கம்ப்யூட்டர் மூலமாக எப்போதாவது வீடியோ அல்லது மியூசிக் இயக்குபவரா நீங்கள்! அப்படியானால் உங்களுக்கு விண்டோஸ் மீடியா பிளேயர் அருமையான மீடியா பிளேயராகத் தோன்றும். இதன் மூலம் நம் பலவகையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் கூடுதலான விருப்பங்கள், பல வகையான பைல் கையாளுதல் என விருப்பப்பட்டால் விண் ஆம்ப் மீடியா பிளேயர் சரியான சாதனம். கட்டணத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பு என்று செய்தி கிடைத்தாலும் இலவச தொகுப்பிலேயே நமக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. மேலும் ரியல் பிளேயர் போல கட்டணப்பதிப்பு பெற்றால் தான் இதை எல்லாம் இயக்குவேன் என அடம்பிடிக்காது. எனவே இலவச விண் ஆம்ப் அனைவரும் தேர்வு செய்திடும் மீடியா பிளேயராக இருப்பதில் வியப்பில்லை.

Thursday, November 12, 2009

ஈ-மெயில் அனுப்பினால் பணம் வருமா???


இமெயில் உலகில் எத்தனை வகை வகையான மெயில்கள் நமக்கு நாம் விரும்பாமலே கிடைக்கின்றன. பார்வேர்ட் செய்திடச் சொல்லி ஒரு சில இமெயில்கள் நம்மைக் கட்டாயப்படுத்தும். இந்த மெயிலைப் பார்வேர்ட் செய்தால் போற வழிக்குப் புண்ணியம் என்று ஒரு சில வரும்.

ஒரு சில மெயில்கள் இது கடவுள் காரியம்; பார்வேர்ட் செய்யாவிட்டால் பாவம் என்று எச்சரிக்கும். நீங்களும் மெனக்கெட்டு உங்கள் நண்பர் ஒவ்வொருவருக்கும் அனுப்புவீர்கள். சென்ற வாரம் எனக்கொரு மெயில் வந்தது. ஒரு குழந்தைக்குத் தீராத நோய் என்று சொல்லி அக்குழந்தையின் குடும்பத்தின் ஏழ்மை குறித்து ஒரு சிறிய விளக்கம். பின் ஒருவர் அந்தக் குழந்தைக்காக எழுதியதாக ஒரு கவிதை. அதன்பின் இந்த மெயிலை ஜஸ்ட் பார்வேர்ட் செய்திடுங்கள். யாராவது பார்த்து பணம் அனுப்புவார்கள். அந்த பணம் அக்குழந்தைக்கு உதவுகையில் உங்களுக்கு கூகுள் நிறுவனம் பணம் கொடுக்கும் என்று எழுதப்பட்டிருக்கும்.

இது போன்று வரும் கடிதங்கள் அனைத்துமே பொழுது போகாதவன் யாராவது செய்திடும் இன்டர்நெட் சில்மிஷங்கள். இதில் எதுவும் உண்மை இருக்காது. எந்த நிறுவனமும் அனைத்து இமெயில்களையும் தேடி யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. எனவே இது போன்ற இமெயில்கள் வந்தால் தொடர்ந்து அனுப்பும் வேலையை மேற்கொள்ளாதீர்கள். சரி, உண்மையிலேயே நல்ல விஷயம் குறித்த இமெயில் வந்தால் என்ன செய்வது? அது அந்தக் கடிதத்திலேயே தெரிந்துவிடும். உங்களுக்கு உற்ற நண்பர்கள் என்றால் அதன் உண்மை தெரிய இன்னொரு இமெயில் அனுப்பிக் கேட்கலாம். அல்லது www.snopes.com என்ற தளத்திற்குச் சென்று உங்கள் இமெயில் குறித்த சில சொற்களை அமைத்து தேடினால் தற்போது இது போல வரும் இமெயில்கள் குறித்த பட்டியலைத் தரும்.

நான் தேடிய போது கிடைத்த சுவாரஸ்யமான பரிசுகள்.

இந்த இமெயில் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்படுகையில் அனைவருக்கும் ஒரு பீர் பாட்டில் பரிசு.

குறைந்தது 11 பேருக்கு அனுப்பு; இல்லையேல் உனது கூகுள் இமெயில் முடக்கப்படும்.

இந்த மெயிலை அனுப்பும் 1000 ஆவது ஆளாக நீங்கள் இருந்தால் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவருக்கு இலவச டிக்கெட்.

மனித மாமிசம் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது. உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இதனைத் தெரிவியுங்கள். இந்த விஞ்ஞானி எழுதியுள்ளார்.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகிறது. இதனைப் படித்தாலே இவை அனைத்தும் எவ்வளவு பெரிய மோசடி என்று தெரியும். எனவே அடுத்த முறை ஏதாவது ஒரு இமெயிலை தொடர்ந்து பார்வேர்ட் செய் என மெயில் வந்தால் உடனே அதனை அழித்துவிடுங்கள்.

மொபைலுக்கு வயது 26


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொ
பைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.

ஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் (“BRICK”) என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.

அப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.

தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance

Remote Assistance

விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம்.
அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு நண்பரை அழைத்து அவர் அங்கிருந்தே உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கும் வசதியை Remote Assistance தருகிறது.
இந்த வசதியைப் பெற உங்கள் கணினியிலும் இணைய விரும்பும் கணினியிலும் இணைய இணைப்புடன் விண்டோஸ் எக்ஸ்பியும் (விஸ்டாவிலும் மேம்படுத்தப்பட்ட ரீமோட் எஸிஸ்டன்ஸ் வசதி கிடைக்கிறது) நிறுவியிருத்தல் வேண்டும். அத்துடன் வின்டோஸ் லைவ் மெஸ்ஸெஞ்சரில் இணைவத்ற்கான ஒரு மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
நீங்கள் நண்பரை அழைத்ததும் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு கணினியுடன் இணைப்பை ஏற்படுத்தியதும் உங்கள் கணினியின் டெஸ்க் டொப் திரையை அவரது கணினியில் காண முடியும். அவருக்கு உங்கள் கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதி வழங்கப்படின் அவரது கீபோர்டையும் மவுஸையும் உபயோகித்து உங்கள் கணினியை முழுமையாக அவரது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் Help and Support தெரிவு செய்யுங்கள். உதவி வேண்டுபவர் மட்டுமே இதனைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது Help and Support விண்டோ தோன்றும். அங்கு Ask For Assistance மெனுவின் கீழ் உள்ள Invite a Friend to connect to your computer with Remote Assistance என்பதைத் தெரிவு செய்யுங்கள். அடுத்து தோன்றும் விண்டோவில் Invite someone to help you எனும் லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் விண்டோவில் விண்டோஸ் மெஸ்ஸெஞ்சர் காட்டும் பட்டியலிலிருந்து உதவியைப் பெற விரும்பும் நண்பரின் பெயரைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள Invite this person லிங்கில் க்ளிக் செய்தல் வேண்டும். அப்போது உங்கள் நண்பர் உங்கள் கணினியின் டெஸ்க்டொப்பைப் பார்வையிட அனுமதிக்கும். நண்பர் உங்கள் கணினியை முழுமையாகத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர Take control பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் ஓகே க்ளிக் செய்து அவரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும்.

பைல் சிஸ்டம் – 2


FAT16, FAT32 மற்றும் NTFS எனும் மூன்று பைல் சிஸ்டங்களும் ஒரே விததிலேயே இயங்குகின்றன. இவற்றுக் கிடையே உள்ள முக்கிய வேறுபாடு யாதெனில் ஒவ்வொரு பைல் சிஸ்டமும் ஹாட் டிஸ்கில் எவ்வளவு வெற்றிடத்தைக் கையாளும் திறன் வாய்ந்தது என்பதாகும். பைல்களைக் கையாளும் திறனில் காணப்படும் பாரிய சிக்கல் யாதெனில் ஹாட் டிஸ்கில் ஒவ்வொரு க்ளஸ்டரும் ஒரு பைலை மட்டுமே சேமிக்கும். அதாவது ஒவ்வொரு அணியும் ஒரு விடயத்தை மாத்திரமே கையாளும். கீழே தரப்படும் உதாரணங்களைக் கவனியுங்கள்.
இயங்கு தளமானது ஒரு தொகுதி நபர்களை குழுவுக்கு 8 பேர் வீதம் பிரித்துக் கொள்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பையும் உள்ளது. இப்போது இயங்கு தளம் பென்சில்கள் கொண்ட ஒரு பெட்டியை முதல் அணியிடம் கொடுத்து அவற்றை பையில் போடச் சொல்கிறது.. முதல் எட்டுப் பேரும் அந்தப் பென்சில்களை பையில் போட்டு விடுகிறார்கள். ஒரு பை நிரம்பியதும்ம் அடுத்த நபருக்குக் கைமாறுகிறது. இவ்வாறு 7 பைகளை அந்தப் பென்சில்கள் நிரப்பி விடுகின்றன்..
இப்போது இயங்குதளம் அந்த அணியில் மீதமிருக்கும் எட்டாவது நபரின் பையில் போடுமாறு வேறொரு பொருளைக் கையளிக்க முயற்சிக்கிறது. எனினும் அந்த அணியானது ஏற்கனவே தம்மிடம் பென்சில்கள் தரப்பட்டுள்ளதாகவும் இந்தப் பொருளை ஏற்க முடியாது எனவும் மறுக்கிறது. பதிலுக்கு இயங்கு தளம் ஹாட் டிஸ்கில் (1/8 = 0.125) 12 வீதத்தை விரயம் செய்வதாகச் சொல்கிறது. எனினும் பைல் சிஸ்டம் தம்மால் அதனைத் தவிர்க்க முடியாது எனச் சொல்லி விடுகிற்து. .
அடுத்து இயங்கு தளம் 8 பேர் கொண்ட வேறொரு அணியிடம் ஒரே ஒரு பென்சிலை மாத்திரம் கொடுத்து அதனைப் பையில் போடச் சொல்கிறது. அதனை வாங்கிக் கொண்ட அந்த அணி வேறு எதனையும் வாங்கிக் கொள்ள மறுக்கிறது. இப்போது இயங்கு தளம் 100 வீதமான வெற்றிடம் அங்கு விரயம் செய்யப்படுவதாகச் சொல்கிறது. . எனினும் பைல் சிஸ்டம் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனச் சொல்லி விடுகிறது.
இந்த உதாரணங்கள் சிறு பிள்ளைத்தனமாகத் உங்களுக்கு தோன்றலாம். எனினும் இவ்வாறன நிகழ்வே பைகளைச் சேமிக்கும்போது நடை பெறுகிறது.
க்ளஸ்டரின் எண்ணிக்கை அதிகமாகும் போது விரயமாகும் ஹாட் டிஸ்கின் வெற்றிடமும் அதிகமாகும். க்ளஸ்டரின் அளவுக்கேற்ப ஒவ்வொரு பைவையும் மாற்றியமைக்க முடியுமானால் எந்த வித விரயமும் ஏற்படப் போவதில்லை. எனினும் அது சாத்தியமானதல்ல.
ஒவ்வொரு க்ளஸ்டரின் அளவையும் கணினி எவ்வாறு தீர்மாணிக்கிறது? இதற்கு மிக எளிதாக விடை காண்லாம். ஹாட் டிஸ்கின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மொத்தம் பயன்படுத்தப்ட்டுள்ள க்ளஸ்டர்களின் எண்ணிக்கையால் வகுக்க வருவது ஒரு க்ளஸ்டரின் அளவாகும்.
அதாவது க்ளஸ்டரின் அளவு = ஹாட் டிஸ்க் வெற்றிடம் / க்ளஸ்டர்களின் எண்ணிக்கை
க்ளஸ்டரின் அளவு அதிகரிக்கும்போது டிஸ்க் விரயமும் அதிகரிப்பதால் அதிக எண்ணிககையிலான க்ளஸ்டர்களைக் கையாளக் கூடிய ஒரு பைல் சிஸ்டமே எமக்கு அவசியமாகிறது. இந்த இடத்திலேயே FAT16 மற்றும் FAT32 என்பன வேறுபடுகின்றன. FAT32 அதிக என்ணிக்கை யிலான க்ளஸ்டர்களைக் கையாள வல்லது.
ஏன அப்படி? எளிமையான விளக்கம் தருவதானால் FAT32 இல் FAT16 ஐ விடவும் அதிக அளவில் க்ளஸ்டர்களை இலக்கமிட முடியும். ஒவ்வொரு க்ளஸ்டரும் பைல் சிஸ்டம் மூலம் இலக்கமிடப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். FAT16 ஆனது 16 இலக்கங்கள் கொண்ட (16 பிட்) பைனரி இலக்க முறையை அதற்குப் பயன்படுததுகிறது. இதன்படி FAT16 மூலம் இலக்கமிடக்கூடிய அதி கூடிய எண் 65535. ஆகவே FAT16 இல் 65535 க்லஸ்டர்களை இலக்கமிடலாம். இதிலிருந்து என்ன தெளிவாகிறதென்றால், ஹாட் டிஸ்கின் அளவு பெரிதாகும்போதும் க்ளஸ்டரின் எண்ணிக்கை (number of clusters) அதே அளவு மாறாமலேயிருக்கும். ஆகவே க்ளஸ்டரின் அளவு (cluster size) அதிகரிக்கும்
எனினும் ஒரு க்ளஸ்டரின் அளவை எல்லையின்றி அதிகரிக்க முடியும் எனக் கருதுவதும் தவறு. ஏனெனில் ஒவ்வொரு க்லஸ்டரிலும் உள்ள செக்டர்களும் இலக்கமிடப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொரு செக்டரும் ஒரு தொடரிலக்கத்தைக் கொண்டிருக்கும். அது ஒரு பைட்டின் அளவிற்குள் இருக்கும். ஒரு பைட் என்பது 8 பிட்டுகளைக் கொண்டிருக்கும்., அதாவது செக்டர்களைக் குறிக்கப் பயன்படும் இலக்கம் மூலம் 2^7 (இரண்டின் 7 ஆம அடுக்கு) அல்லது 128 செக்டர்களை இலக்கமிட முடியும். இதிலிருந்து பின்வரும் முடிவைப் பெறலாம். .
உங்களிடம் 65536 க்ளஸ்டர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு க்ளஸ்டரும் 128 செக்டர்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு செக்டரும் 512 பைட்டுகளைக் கொண்டுள்ளன.
இதிலிருந்து FAT16 கையாளக் கூடிய ஹாட் டிஸ்க் அளவு 65535 X 128 X 512 = 4 GB
FAT16 கையாளும் அதி கூடிய ஹாட் டிஸ்க் அளவு 2 GB .என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் அப்படியானால் இந்தக் கணக்கு சரிதானா?. FAT16 இல ஒவ்வொரு க்ளஸ்டரும் 32 கிலோபைட்டைக் கொண்டிருக்கும். இங்கு சிக்கல் என்னவென்றால் 128 செக்டர்கள் X 512 பைட் தருவது 65536 எனும் இலக்கமாகும். இது 16 பிட் இலக்கமொன்றால் கையாளக்கூடிய என்ணிக்கையை விட ஒன்று அதிகமாகும். எனவே 128 ற்குப் பதிலாக 64 செக்டர் கொண்ட க்ளஸ்டராகக் குறைத்துக் கொள்ள் வேண்டி ஏற்படுகிறது. அதன்படி க்ளசஸ்டரின் அளவு 32 கிலோ பைட்டாக மாறுகிறது. 32 கிலோ பைட் X 65535 தருவது அண்ணளவாக 2 GB எனும் பெறுமானமாகும். .

பிரபலமான பத்து கட்டற்ற மென்பொருள்கள்








Mozilla Firefox)
பலராலும் விரும்பப்படும், பயன்படுத்தப்படும் ஒரு ஓபன் சோர்ஸ் (Open Source) மென்பொருள் மொஸில்லா பயபொக்ஸ் எனும் இணைய உலாவி (வெப் பிரவுஸர்).. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி ப்யபொக்ஸ் 47.1% இணைய பாவனையாளர்களால் பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கிறது. அதே வேளை இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் 28 % பாவனையாளர்களாலேயே பயன்படுத்தபபடுவதாக் அதே புள்ளி விவரம் தெரிவிக்கிறது, அத்துடன் 24 மணி நேரத்தில் (2008 ஜூன் மாதம் 17 ஆம் திக்தி) 8,002,530 இணைய பாவனையாளர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பயபொக்ஸ் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.




2. மொஸில்லா தண்டர்பர்ட் (Mozilla Thunderbird )
மொஸில்லா தண்டர்பர்ட் இமெயில்கள் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஓபன் சோர்ஸ் இமெயில் க்ளையண்ட். மென்பொருளாகும். பல்வேறு வசதிகளுடன் ஸ்பாம் எனும் குப்பை அஞ்சல்களை வடிகட்டுவதில் சிறப்பாகச் செயற்படுகிறது. தண்டர்பார்ட்.
ஓபன் ஆபிஸ் (Open Office)
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் தொகுப்பே ஓபன் ஒபிஸ். எம்.எஸ்.ஓபிஸில் போன்று Word Processing, Spreadsheet, Presentation, Graphics, Database மென்பொருள்களும் அடங்கியுள்ளன. இது ஏனைய ஒபிஸ் மென்பொருள்களுடன் ஒத்திசையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளtதால் இதன் மூலம் எம்.எஸ்.வர்ட்., எக்ஸல் பைல் வகைகளைக் கூட கையாளலாம்.
4. ஜிம்ப் (GIMP)
அடோபி நிறுவனத்தின் (Photoshop) போட்டோசொப் போன்ற ஒளிப்படங்களைக் கையாளக் கூடிய ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளே ஜிம்ப். கிரபிக்ஸ் டிசைனிங் பயன்பாடில் உதவக் கூடிய ஒரு சிறந்த மென்பொருளாக ஜிம்ப் விளங்கிகிறது.. போட்டோசொப் கொண்டு உருவாக்கப்படும் PSD பைல்களையும் கூட இதன் மூலம் கையாள முடியும்.
5. பிட்ஜின் (Pidgin)
இணைய உரையாடலில் பயன்படுத்தப்படும் ஓபன் சோஸ் மென்பொருளே பிட்ஜின். முன்னணியிலுள்ள Yahoo, MSN, GTalk, ICQ போன்ற உடனடி செய்தி (Instant Messenger) பரிமாற்றத்தில் பயன் படுத்தப்படும், மென்பொருள்களுடன் இது ஒத்திசையக் கூடியது. முன்னர் இது GAIM என்ப் பெயரிடப்பட்டிருந்தது,
6. வீ.எல்.சீ மீடியா ப்ளேயர் (VLC Media Player)
ஒலி மற்றும் ஒளி வடிவிலானா பைல்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த ஓபன் சோர்ஸ் மீடியா ப்ளேயர் மென்பொருள்.. MPEG1, MPEG2, MPEG4, DivX, MP3, VCD, DVD, Audio CD, என ஏராளமானா ஓடியோ வீடியோ பைல் வகைகளை இதன் மூலம் கையாள் முடியும். .
7. க்ளேம்வின் (ClamWIN)
இது விண்டோஸ் இயங்கு தளத்திற்கென உருவாக்கப் பட்டிருக்கும் ஓபன் சோஸ் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள். ஏனைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்க்ளைவிட கூடிய விகிதத்தில் வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களைக் கண்டறிகிறது. வியாபார நோக்கில் உருவாக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களுக்கு நிகராக் ஒழுங்கான கால இடைவெளியில் வைரஸ் ஸ்கேன் செய்தல், அதனை அப்டேட் செய்து கொள்ளல் போன்ற வசதிகளையும் கொண்டுள்ள்து.
8. 7-ஸிப் (7-Zip)
வின்ஸிப், வின்ரார் போன்ற பைல் அளவினைச் சுருக்க வல்ல (File Ccompression) ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள். வின்ஸிப் (WinZip) , மற்றும் வின்ராருடன் (WinRAR) ஒப்பிடும் போது இதன் பைல்களாச் சுருக்கும் விகிதம் மேம்பட்டதாயுள்ளது. அத்தோடு ஏரளமான பைல்களைச் சுருக்கும் மென்பொருள்களுடன் ஒத்திசைவது இதன் சிறப்பம்சம். எனலாம்.
9. பைல்ஸிலா (FileZilla)
இது எந்த ஒரு இயங்கு தளத்திலும் இயங்கத் தக்க பைலக்ளை இணையம் வழியே பரிமாறக் கூடிய ஒரு FTP (File Transfer Protocol) மென்பொருள். விண்டோஸ் தளத்திற்கென உருவாக்க் பட்டிருக்கும் FTP மென்பொருள்களில் சிறந்ததாக பைல்ஸிலா கருதப்படுகிறது,
10. ஒடேசிட்டி (Audacity)
ஒடேசிட்டி என்பது ஒலிப்பதிவு செய்யவும் ஒலிக் கோப்புகளை (sound files) எடிட் செய்யவும் என உருவாக்கப்பட்டுள்ள் ஒரு ஓபனசோர்ஸ் மென்பொருள். ஒடேசிட்டி மூலம் ஒலிப்பதிவு செய்வது மட்டுமன்றி பல்வேறு ஒலி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். எவரும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எளிமையயன இடை முகப்பையும் கொண்டுள்ளது வர்ததக நோக்கில் உருவாக்கப்படும் ஒலிப்பதிவு செய்யக் கூடிய மென்பொருள்களை விட தரம் மிக்கதாக ஒடேசிட்டி விளங்கிகுகிறது.

உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போகிற்தா?

1 கணினியில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். திடீரென்று கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இய்க்கமேது மற்று உறைந்து (freeze) விடுகிறது அல்லது நீல்த் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழைச்ச் செய்திகளைக் காண்பிக்கிறது.. இந்த இரு வகையான் சிக்களும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழமையாக எதிர் கொள்பவைதான்.

இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவை தான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்க லாம்.

கணினி உறைந்து விட்டது என்பதை விண்டோஸ் இயங்கு தளம் பலவாறு திரையில் காண்பிக்கும். இவற்றுள் ஒரு எப்லிகேசன் நம் விருப்பப்படி செயற்படாமால் போவது ஒரு பொதுவான் அறிகுறியாகும். எப்லிகேசன் விண்டோக்கள் மினிமைஸ் செய்ததுபோல் டாஸ்க் பாரில் ஒட்டிக் கொண்டிருக்கும். ம்றுபடி முன்ன்ர் இருந்த நிலைக்கு விண்டோவைக் கொண்டுவர முடியாமலிருக்கும். மவுஸ் பொயிண்டர் நகராமல் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதுவும். கணினி உறைந்து விட்டது என்பதை வெளிப்படுதும் ஒரு முக்கிய அறிகுறி

outlook-not-responding

சில வேளைகளில் This program performed an illegal operation and will be shut down அல்லது இந்த எப்லிகேசன் செயற்பட மறுக்கிறது (Not Responding) போன்ற பிழைச் செய்திகளைக் விண்டோஸ் காண்பிக்கும். ஒரு எப்லிகேசன் செய்ற்பட மறுப்பதை விண்டோஸ் இவ்வாறு பல வழிகளில் காண்பிக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேகமாக் அந்த எப்லிகேசனை நிறுத்தி விடுமாறு அல்லது கணினி தானாக் அந்த எப்லிகேசனை மறுபடி ஆரம்பிக்கும் வண்ணம் கேன்சல் செய்து விடுமாறு விண்டோஸ் பரிந்துரைக்கும்.

நீலத் திரை மரணம் (blue screen of death) என்பது ஒரு வெளிப்படையான அறிகுறி. நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிறத்தில் சில பிழைச் செய்திகளைக் காண்பிக்கும். இந்த நிலையை crash க்ரேஷ் எனப்படுகிற்து..

task

.குறைபாடுகளுள்ள் அல்லது ஒன்றோடொன்று ஒத்திசையாத வன்பொருள் சாதனங்கள், இயங்கு தளம், எப்லிகேசன் மென்பொருள் மற்றும் ட்ரைவர் மென்பொருள் போன்றவற்றில் ஏற்படும் வழுக்கள். மற்றும் கணினி நினைவகத்தில் ஏற்றப்படும் அதிக சுமை என்பன கணினி க்ரேஷ் ஆவதற்கும் ப்ரீஸ் ஆவதற்கும் முகிய காரணங்களாகும்.

இவற்றுள். நினைவகத்தில், அதிக சுமை ஏற்றுவது பொதுவானா ஒரு காரணியாகும். கணினி செயற்பட, போதுமான அளவு நினைவகம் அவசியம். இதனை RAM ரேம் அல்லது Random Access Memory எனப்படும்.. கணினி ஒரு நேரத்தில் கையாளக் கூடிய அளவை விட மேலதிகமாக் சுமை ஏற்றும்போது கணினி தற்காப்பு நடவடிகையாக க்ரேஷ் ஆகி விடுகிறது., ஒன்றுக்கு மேற்பட்ட எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படுவதே இவ்வாறு கணினி உறைந்து விடுவத்ற்கான பொதுவான் காரண்மாகும். அதனால் நீங்கள் பயன் படுத்தாத எப்லிகேசனை நிறுத்தி விடுவது கனினியின் நினைவகச் சுமையக் குறைத்து விடும். .

சில எப்லிகேச்ன்களுக்கிடையிலான முரண்பாடுகளும் (Conflicts) கணினி க்ரேஷ் ஆவதற்குரிய மற்றுமொரு காரணமாகும். ஏனைய எப்லிகேசன்களுடன் முரண்படும் மென்பொருள்களில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களும் அடங்கும்.

கணினி எதிர்பாராத் விதமாக் க்ரேஷ் ஆகும்போது கணினியில் இயக்கமே நின்று விடும். கணினியைப் பழுது பார்க்கு முன்னர் கணினி க்ரேஷ் ஆவதற்கான் காரணத்தைக் கண்டு பிடித்துக் கொள்வது நண்மை பயக்கும். அதன் முதல் படியாக கணினியை ரீபூட் (reboot) செய்ய வேண்டும்..கணினி முறையாக் ரீபூட் ஆகுமானால் ரெஜிஸ்ட்ரியில் (Registry) ஏதோ சிக்கலிருப்பது உறுதியாகிறது.. உடனடியாக் ரீபூட் ஆக வில்லையானால் கணினியை சேப் மொடில் (Safe Mode) ரீபூட் செய்து ஒரு ரெஜிஸ்ட்ரி க்லீனர் கொண்டு ரெஜிஸ்ட்ரியைப் பழுது நீக்கிக் கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆரம்பிக்கு முன்னர் கீபோர்டில் F8 விசையை அழுத்துவதன் மூலம் கணினியை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்ற மெனுவை வரவழைத்து சேப் மோடில் நுளையலாம்..

computer-crash

விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியிலிருக்கும் ஒவ்வொரு பைலும் கணினியிலுள்ள ஒவ்வொரு எப்லிகேச்னுக்குமுரிய கட்டளைகளைக் கொண்டுளன. அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை ரெஜிஸ்ட்ரி பைல்களே கொண்டிருக்கும். இந்த ரெஜிஸ்ட்ரி பைல்கள் பழுதடையும் போது அல்லது இடம் மாறி விடும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் கணிணி தடுமாறுகிரது. இவ்வறான சந்தர்ப்பத்தில் கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் க்ரேஷ் ஆகி விடுகிரது.

சில மென்பொருள்களைப் புதிதாக நிறுவும்போது கூட கணினி க்ரேஷ் ஆகலாம். அப்போது அந்த மென்பொருளை அகற்றி விடுவதே சிறந்த வழி.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் முறையாக செயற்பட மறுக்கும் ஒரு எப்லிகேசனை டாஸ்க் மேனேஜரை (Task Manager) வரவழைப்பதன் மூலம் நிறுத்தி விடலாம். டாஸ்க் மேனேஜரை வரவழைக்க Ctrl + Alt + Delete விசைகளை ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும். செயற்பட மறுக்கும் எப்லிகேசன் பெயரை டாஸ்க் மேனேஜர் விண்டோவில் காண்பிக்கும். அதிலிருந்து உரிய எப்லிகேசனை தெரிவு செய்து End Task பட்டனில் க்ளிக் செய்வதன் மூல்ம் நிறுத்தி விடலாம்.

டாஸ்க் மெனேஜர் மூலமாகாவும் உரிய எப்லிகேசனை நிறுத்த முடியாது போனால் டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் நிலையில் மறுபடியும் Ctrl + Alt + Delete விசைகளை அழத்துங்கள். கணினி ரீபூட் ஆக ஆரம்பிக்கும்.

ரீபூட் ஆக வில்லையெனின் க்னினியில் உள்ள Reset பட்டனை அழுத்தி விடுங்கள். அப்படிம் ஒரு பட்டன் இல்லையென்றால் கவலை வேண்டாம். கணினியிலுள்ள பவர் பட்டனை ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக் கொண்டேயிருங்கள் கணினி முழுமையாக் சட்டவுன் ஆகிவிடும்.

கணினி க்ரேஷ் ஆவதும் ப்ரீஷ் ஆவதும் தவிர்க்க முடியாதது. அதனால் கணினியில் முக்கியமான பைல்களை அவ்வப்போது நகலெடுத்துப் பாதுகாக்கும் பழக்கத்தை கடை பிடிக்க மறந்து விடாதீர்க்கள்

என்ன இந்த BIOS?



AMI

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது.

கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

bios கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன.

தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது.

BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. .

பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.

asrock-k7vm3

சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.

பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தர்யாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை.

தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ரொம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ள லாம்.