jkr

Tuesday, November 10, 2009

விண்டோசில் றியிஸ்ரி என்றரல் என்ன?

விண்டோசில் றியிஸ்ரி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதிலேயே விண்டோஸ் இயங்கு தளம் பற்றிய சகல விபரங்களும் பதிந்து வைக்கப் பட்டிருக்கும். இதில் ஏதேனும் தவறான மாற்றங்கள் ஏற்படுமிடத்து விண்டோஸ் இயங்குதளமே பதிக்கப்படும். ஆனால் இதைப்பற்றி நன்றாக அறிந்தவர்கள் இதில் மாற்றங்கள் மேற்கொண்டு விண்டோஸை தம் விருப்பப்படி மெருகேற்றலாம்.

இந்த றியிஸ்ரில் மாற்றம் செய்வதன்மூலம் நாம் பலவாறான மாற்றங்களை விண்டோஸில் ஏற்படுத்தமுடியும். உதாரணமாக

♠ Start பட்டனிலுள்ள Start என்பதற்குப் பதிலாக நமக்கு விருப்பமான பெயரை இடலாம்.


♠ கணினி On ஆகி விண்டோஸ் Loading ஆகும் போது உங்களுடைய பெயர் வரும்படி செய்யலாம்.



♠ Recycle bin ற்கு பெயரை மாற்றலாம்.


♠ மை கம்யூட்டரில் உள்ள floppy டிரைவையோ அல்லது வேறு டிரைவுகளையோ மறைக்க முடியும்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பின்னனியை மாற்றலாம்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயரை மாற்றலாம்.


♠ Display properties ஜ மறைக்க முடியும்.
♠ Control panel ஜ மறைக்க முடியும்.
♠ Start மெனுவின் வேகத்தை கூட்ட முடியும்.
♠ விண்டோஸ் மூலம் டொஸ்ஸிற்கு செல்வதை தடுக்கலாம்.
♠ Shortcut களின் அடியிலிருக்கும் வளைந்த அம்புக்குறிகளை அளிக்கலாம்.

இவற்றைப்போன்று பல்வேறு ஜாலங்களை றியிஸ்ரியில் மாற்றங்கள் செய்வதன்மூலம் புரியலாம்.ஆனால் இவற்றைச் செய்யும்முன்னர் நீங்கள் றியிஸ்ரியை Backup எடுத்துவைத்தல் அவசியமாகும் ஏனெனில் தற்சமயம் நீங்கள் மாற்றம் செய்யும் போது ஏதாவது தவறு ஏற்பட்டுவிடின் இது பயன்படும்.

றெயிஸ்ரியை Backup செய்து கொள்ள.
Start -> Run -> Regedit
இப்படி றியிஸ்ரியை திறந்து பைல் மெனுவிலுள்ள Export என்பதை கிளிக் செய்து Save செய்யவேண்டிய இடத்தைக் காட்டி இதற்கு ஒரு பெயரை வளங்கி அதற்கு அடுத்ததாக Export range என்பதில் All என்பதை தெரிவு செய்து Save செய்தால் போதும்.

0 comments:

Post a Comment