பாரக் ஒபாமா அதிபர் பதவிக்கான தேர்தலில் இண்டெர்நெட்டை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக்கொண்டவர்.டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை அவர் பிரசாரத்திற்கும் பிரச்சார நிதி திரட்டவும் பயன்படுத்திய விதம் இண்டெர்நெட் பயன்பாடிற்கான முன்னுதாரணமாக கருதப்படுகிறது.
ஒபாமா அதிபராக பதவியேற்றப்பிறகும் தன்னை பதவியில் அமர்த்திய இண்டெர்நெட்டை மறந்துவிடாமல் இருக்கிறார்.மக்களோடும்,ஆதரவாளர்களோடும் தொடர்பு கொள்ள அவர் இண்டெர்நெட்டை பயன்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது ஒபாமா தனது குடும்ப புகைப்படங்களை புகைபட பகிர்வு தளமான ஃபிளிக்கரில் வெளியிட்டிருக்கிறார்.அதிபர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் போது எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.அததைத்தவிர தினசரி நிகழ்ச்சிகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒபாமா தனது மனை மற்றும் பிள்ளைகளோடு மகிழ்ழ்ச்சியொடு காணும் இந்த படங்கள் பார்ப்பதற்கு பரவசத்தை தருகின்றன,
நாட்டின் தலைவரது நிகழ்ச்சி நிரல் சார்ந்த படங்களை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வம் இருக்கத்தானே செய்யும்.ஒபாமா அதனை ஃபிளிகர் மூலம் நேரடியாகவே நாட்டு மக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனால் இந்த படங்களை பயன்படுத்தும் போது வெள்ளை மாளிகை காப்புரிமை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
—-
link;
http://www.flickr.com/photos/whitehouse/
0 comments:
Post a Comment