jkr

Thursday, December 10, 2009

ப்ளாக் உருவாக்குவது எப்படி?

முதலில் http://www.gmail.com/ போய் உங்களுக்கென ஒரு gmail account உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏற்கனவே ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தாலும், blogging க்கு என புது அக்கவுண்ட் ஒன்று உருவாக்கிக் கொள்வது நல்லது என்பது என் அபிப்பிராயம்.


இப்போ,
http://www.blogger.com/ ஓபன் செய்யுங்க. அதில் கீழ்கண்டவாறு இருக்கும்.

இதில் உங்கள் gmail user id, password கொண்டு லாக் இன் செய்யுங்கள். இப்போ கீழே உள்ள ஸ்கிரீன் வரும்.
இதில் display name என்று இருக்கும் இடத்தில் உங்க பெயரை அல்லது புனைப் பெயரை தரவும். ஒவ்வொரு பக்கத்துக்கு கீழும் இப்பெயர் தான் வரும். (for example, posted by: sumazla). அதன் கீழ் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்து விட்டு, continue என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இப்பொழுது, கீழ்கண்டவாறு தோன்றும்.
முதலில் blog title. இதில் உங்க ப்ளாகின் தலைப்பை கொடுக்கவும். ரொம்ப யோசனை செய்து கொண்டு இருக்க வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தலைப்பில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். உதாரணமாக பூக்களைப் பற்றிய உங்கள் ப்ளாகிற்கு Flowers என்று title கொடுங்கள்.

அடுத்து ப்ளாக் அட்ரெஸ். இது தான் உங்கள் வலைப்பூவின் பெயர். இது ஈமெயில் ஐடி போல, ஒரு முறை கொடுத்து விட்டால் மாற்ற முடியாது. நன்கு யோசித்து நல்ல தலைப்பாக தேர்ந்தெடுங்கள். நான் தேர்ந்தெடுத்த தலைப்பு sumazla. அது எந்த தலைப்பாக இருந்தாலும் அதனுடன் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம் என்பது சேரும். உதாரணமாக http://sumazla.blogspot.com/. இந்த பெயரை explorer ல் யார் அடித்தாலும் உங்க ப்ளாக் ஓபன் ஆகும்.

ஈமெயில் ஐடி போல பல பெயர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் ஆதலால் அவைலபிலிடி availability செக் பண்ணிக்கோங்க. முடிந்ததா, இப்ப continue பட்டனை க்ளிக் பண்ணுங்க. மீதி அடுத்த அத்தியாயத்தில்.

2 comments:

shabi said...

இதை follow பண்ணி நானும் ஒரு blog open பண்ணறேன்

shabi said...

விரைவில் உங்கள் blog ல் blog blog blog பராக் பராக் பராக் ...................

Post a Comment