jkr

Thursday, December 10, 2009

டெம்ப்ளேட் மற்றும் போஸ்டிங்

அடுத்த பக்கம் கீழ்கண்டவாறு இருக்கும்.
templates - அதாவது உங்க ப்ளாகின் தோற்றம். scroll செய்தால் நிறைய மாடல் வரும். அதில் எதாவது ஒன்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, எப்போ வேண்டுமானாலும், நம்ம ப்ளாக் டெம்ப்ளேட்டை மாற்றிக் கொள்ளலாம். அதனால், ப்ளாகில் உள்ள எந்த பதிவும் அழியாது. அது அப்படியே புது template ல் வந்து விடும். இப்ப கண்டினியூ பட்டனை அழுத்துங்கள்.
மேலே தெரியும் பக்கம் வந்தவுடன், உங்களுக்கு நீங்களே கை கொடுத்துக் கொள்ளுங்கள். ஆம் நீங்கள் வெற்றிகரமாக உங்களுக்கென ஒரு வலைப்பூ உருவாக்கி விட்டீர்கள். ஆனால், இதோடு வேலை முடியாது. உங்க ப்ளாக் காலியா இருக்கே! அதில் எதாவது போடணுமே?! பூக்களைப் பற்றி நாம் ப்ளாக் போடப் போகிறோமல்லவா, எனவே அதில் தோட்டக் கலை, பூக்களின் பயன்கள், பூக்களின் அழகான புகைப் படங்கள் போன்றவற்றை அதில் போட்டுக் கொள்ளலாம். ஆனால் போடும் தகவல்கள், வேறு தளங்களிலிருந்து காப்பி செய்யப் பட்டதாக இருக்கக் கூடாது. படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.



சரி நாம் போஸ்டிங் ஆரம்பிப்போம். start blogging என்ற ரெட் பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போ கீழே உள்ள பக்கம் திறக்கும்.


இப்போ பாருங்க, மேலே posting, settings, layout, view blog என்று 4 tab இருக்கு. அதுல நாம இருக்கிறது போஸ்டிங் tab கீழே.
இப்போ, நாம நம்ம போஸ்டுக்கு ஒரு தலைப்பு கொடுக்கணும். இதில “டெம்ப்ளேட் மற்றும் போஸ்டிங்” என்று இருக்கே, அது மாதிரி. இனி வரும் எல்லா விஷயங்களையும் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். அதனால கவலைப் படாம டக்குனு ஒரு தலைப்பு கொடுங்க. அப்புறம் கீழே நீங்க சொல்ல விரும்பும் விஷயத்தை டைப் செய்யுங்க. அது தான் உங்க போஸ்ட். அதுல font, alignment, insert picture என வழக்கமான ஆப்ஷன்ஸ் நிறைய இருக்கு. அதெல்லாம் பின்னாடி மெதுவா ஒவ்வொன்னா கத்துக்கலாம்.

இப்போ உங்க போஸ்ட்ட டைப் செய்தொன்ன, கீழே அதென்ன லேபிள்னு இருக்குனு குழம்பறீங்க்ளா?! அதை அப்படியே ப்ளாங்கா விட்டுடுங்க. அது தேவை இல்லை. அடுத்ததா advanced blogging என்று ஒரு கட்டுரை தரப் போறேன். அதில அதைப் பற்றி விளக்கமா தருகிறேன்.

இப்ப கீழே உள்ள பப்ளிஷ் போஸ்ட் என்ற சிவப்பு பட்டனை க்ளிக் பண்ணுங்க. அவ்வளவு தான் உங்க போஸ்ட் பப்ளிஷ் ஆகிவிட்டது. இப்ப இந்த விண்டோ வரும்.

இதில் view blog என்றதை க்ளிக் செய்தால், உங்க ப்ளாக் ஓப்பன் ஆகும். இனி அடுத்த போஸ்ட் பண்ணனும்னா, create new post என்பதை க்ளிக் செய்யுங்கள். அல்லது போஸ்ட்டில் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் edit post கு போங்கள். இந்த படத்தில் மேலே, உங்க ஈமெயில் ஐடிக்கு பக்கத்தில், dashboard என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால், உங்க blogger ன் முகப்பு வரும். இப்பொ dashboard கு செல்லுங்கள். அடுத்து என்ன என்று அடுத்த் அத்தியாயத்தில் சொல்கிறேன்.

0 comments:

Post a Comment